Flowers - Myspace Glitters

திங்கள், 12 அக்டோபர், 2009

மறதி


புழுங்கிக் கிடக்கும்
மனதிற்கு
விடுதலை

புகை



உயிர்
அணுக்களின் விதியை எழுதும்
அனுபூதியே...
உன் அடுப்பூதிய வாய்கள்
கருப்பையில் சிதைந்து கிடக்கும்
கணுக்களுக்கும் தீமூட்டவா
புகையை இழுத்தூதுகின்றன?

புதன், 30 செப்டம்பர், 2009

மனசாட்சி


விழிகளின்
குழிகள்…
உணர்வுகளின்
இறுக்கங்கள்...
உறவுகளின்
தேக்கங்கள்...
மனற்கேணியின்
மேடு பள்ளங்கள்…
வலியின்
வடிகால்கள்...
என்றுலாவியே
பார்வைகளும் பழுதாகிறது
முடிசூடாமேல
மூக்கும் ந‌ட‌க்கிற‌து
எங்கே சென்றாய்
மனசாட்சியின்றி...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மொட்டு




திங்கள், 28 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம்

நடந்துச் செல்லும் நதியைக் கேட்டேன்
விழுமின் எழுமின் என்றது

சிறகடித்துப் பறக்க நினைத்தேன்
நில் கவனிச் செல் என்றது

வானச்சல்லடை சளித்துக் கொட்டும்
மழையைக் கண்டேன்
தனித்திரு ஆனால் சேர்ந்திரு என்றது

நகர்ந்துச் செல்லும் மேகக் கூட்டம் கண்டேன்
காத்திரு ஆனால் பசித்திரு என்றது

எது வேண்டாம்
இரத்தத்தைப் பிரித்துப் பார்க்கும்
அன்னப்பறவைகள் வேண்டாம்

இருட்டுத் தோலின் நிறம் பார்த்துக்
கொக்கரிக்கும் சேவல்கள் வேண்டாம்

கற்பனைக்குயவன் தட்டித் தட்டிச் செய்த
கெளரவச் சட்டி வேண்டாம்

ஊர்க்குருவிகளைப் பருந்தாக்கும்
விஞ்ஞானம் வேண்டாம்

விட்டமின்களை ஓரந்தள்ளி விரைவுணவோடு
விண்மீன் பிடிக்க வேண்டாம்

நட்சத்திரங்கள் விழுவதால்
நிலவுக்குக் கோபம் வேண்டாம்

பண மரத்தடியில் உட்கார்ந்து
பால் குடிக்கும் கழுகுகள் வேண்டாம்

மனித நாவுகளை வேட்டையாடும்
நாகரிகக் கோமாளிகள் வேண்டாம்

ஆசைக்குச் சாணைப் பிடிக்கும்
அறிவுக் கொலை வேண்டாம்

புரண்டு புரண்டு படுக்க வைக்கும்
ஞாபகப் புழுக்கள் வேண்டாம்

இஞ்சி டீயும் கிரீன் டீயும்
கரைக்காத கொழுப்பு வேண்டாம்

மருந்தை உணவாக்கி இயற்கையை
இடுகாட்டில் புதைக்க வேண்டாம்

அலங்காரச் சித்திரங்களைத் தேடி
சுவர்கள் தள்ளாட வேண்டாம்

இன்னும் எது வேண்டாம்
என்னை என்னிலிருந்து
பிரிக்கும் நுண்ணறிவு வேண்டாம்

ஓயாது அடிக்கும் மாய அலையில்
அலைக்கழிக்கும் இந்த
அழுக்கு ஜன்மம்இனி வேண்டவே வேண்டாம்

இனி அடுத்த ஜென்மத்திலாவது
பூ பூவாக பூத்துக் குலுங்கட்டும்…

சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இரைப்பை நிரப்ப
கோணிப்பையோடு
குப்பையை
சீய்க்கும்
கோழிகள்


வியாழன், 27 ஆகஸ்ட், 2009


உன் வருகையில்
அரும்புகிறது
என்னுள் நீ
நட்டு வைத்த மரம்

சனி, 22 ஆகஸ்ட், 2009

கடிகாரம்


இந்த ரோஜாவிற்குள் முட்கள்,
நாட்களை கடத்துகிறது


யாருக்காக


இருந்தும் மணக்கிறது
இறந்தும் மணக்கிறது
யாருக்கெனத் தெரியாமலே...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

யாரிவள்?

என்னிலிருந்து வந்தவள்?
என்னை நுழைந்து பார்த்தவள்?
என் புள்ளிகள் வரைந்த கோலம்?
என் உயிரோவியம்?
என் பிரதி?
என் நம்பிக்கை?
என் ஊன்றுகோல்?
என் விதையில் பூத்த பூ ?
என் அறுவடை?
என்னைப் பிரிந்து நிற்கும் நிழல்?
என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

விண்மீன்


விண்மீன்களே
நீர்
விண்ணில் முளைத்ததனால்
தப்பித்தீர்,
தவறி
மண்ணில் முளைத்திருப்பின்
உம்மையும்
கருவாடாக்கி
பையில் போட்டு
விற்றிருப்பர்

புதன், 5 ஆகஸ்ட், 2009

பாரினைக் காக்கும் பசுமை





















திங்கள், 27 ஜூலை, 2009

நெருப்பில் தெரியும் நிலவு முகம்


இதயக்கோயிலில்
ஏற்றி வைத்த தீபமொன்று
முருங்கிப் போனத்திரியில்
தள்ளாடி நிற்க
வீசியடித்தக் காற்று
அதையுந் தட்டிச் சென்றுவிட

இருளுக்குளந்த இறைவனே
இறங்கி வந்து புது நெய்யில்
நல்ல திரியிட்டு
ஏற்றி வைத்துச்
சென்றதாகச் சொல்ல
நிலவில் பார்வை பதித்து
தீபம் சுடர்விட்டு எரிகின்றது

அந்த நிலவின் முகத்தை
மேகக்கரங்கள் தழுவினாலும்
என் கருவறைக்கதவுகள் மட்டுமின்னும்
திறந்தேக் கிடக்கிறது
இந்த நெருப்பிலாவது
தெரியுமா
அந்தக் கடவுளின் முகமென... J


ஞாயிறு, 19 ஜூலை, 2009

எனக்காக

கருவில் பிறந்து
இந்த மொட்டு
இன்னும்
துடிக்கிறது
எனக்காக...
Heart Glitter Graphics

செவ்வாய், 14 ஜூலை, 2009

உறங்கிடும் பூ


மகரந்தத்தில் மயங்கி
பூவுக்குள்
உறங்கிடும் பூவே
தேடலை நாடி ஓடி
வெடித்துச்சிதறிய
பஞ்சுகளுக்குள்ளே
தூக்கத்தை
தேடித் தேடி
கிட்டவில்லை இன்னும்
அமைதியான உறக்கம்
நீயாவது
நிம்மதியாய்
தூங்கிடு

ஞாயிறு, 12 ஜூலை, 2009


கிழட்டு யானையின்
முரட்டுப்பிடியில்
சிக்கித் தவித்த குருவி
திடீரென்று முதுகில்
குத்தி பறந்துச் செல்ல
கழுதைகள் படை சூழ
நகர்வலம் போய்
மூக்குடைந்த யானை
நிர்வாணமாய் நடுத்தெருவில்...

அறு



பேனாக் கத்தி
அறுக்கலாம்

பேனாவும்
சில நேரங்களில் நீயும்

எப்படி?

வியாழன், 2 ஜூலை, 2009

வெறுமை

Image and video hosting by TinyPic
வெள்ளைச் சுவற்றின்
கிறுக்கல்கள்

கிழித்தெறியும்
தாட்கள்

கசக்கிப் போடும்
காகிதங்கள்

கிறுக்கித் தள்ளும்
பென்சில் முனைகள்

கலைந்து கிடக்கும்
புத்தகங்கள்

வரைந்து தள்ளும்
கோட்டோவியங்கள்

வெறித்துப் பார்க்கும்
கரடி பொம்மை

கார்ட்டூனின்
கேள்வி பதில்கள்

பாடங்கேட்கும்
மிக்கி மவுஸ்

சொல்லச்சொல்ல
சொல்லுங் கிளி

விசிறி எறியும்
விளையாட்டு சாமான்கள்

மெளன மொழி
பேசும் விழிகள்

அத்தனையும் சொல்கிறது
இவளின் வெறுமையை

அசைந்தாடும்
பூங்கொடியாள்
முகத்தில்
துள்ளியோடும்
பட்டாம்பூச்சி