Flowers - Myspace Glitters

வெள்ளி, 8 பிப்ரவரி, 2008

மகரந்தத்தின் மகசூல்
பூக்களின் புண்ணியம்
வேரின் எச்சம்
வேரின் மூலம்
விழுதுகளின் நண்பன்
கனி பெற்றெடுக்கும்
குழந்தை

இன்று புதிதாய் பிறப்போம்




இன்று புதிதாய்ப் பிறப்போம் எனறெந்தன்
தலைப்பை இயம்பியவுடன்
நினைவில் வந்து சென்றான் மா கவி
எண்ணமதைத் திண்ணமுற இசைத்து என்று.

தேனில் விழுந்த ஈ போல் நம்
பழைய வழக்கங்கள் மு்த்தப் பொய்களானாலும்
பண்பாடு என்று சொல்லி களிப்போடு
மையல் கொள்ளும் இந்த தீபாவளி

மயிலிறகின் வருடலோடு
சில நிழலோவியங்கள்
நெஞ்சில் நிறைவாய் என்றும்...

நல் பச்சரிசி மாவெடுத்து
பக்குவமாய் அதை அரைத்து
மனமுருகி மாக்கோலமிட்டு பின்
கை நிறைய மனம் நிறைய
மறக்காமல் உள்ளங்கால் நிறைய
மருதாணியிட்டு
கை கால் நீட்டி
நெட்டியும் முறித்து நீண்டு படுத்தால்
மத்தாப்பூச் சிரிப்போடும்
மருதாணிச் சிகப்போடும்
இடியுடன் கூடிய சரவெடிச் சத்தத்தில்
தீப்பொறிப் பறக்க
தீபாவளிப் பிறக்கும்.

பட்டாசுப் புகையுனுள் பகலவனும்
பதுங்கியே வருவான்

இதழோரம் அமிழ்தூறும்
பட்சணமில்லா பண்டிகையா
உரல் நழுவி சுருண்டு விழும்
மொறு மொறு தேன் குழலும்

பாலின் சுவையில் பாய்ந்த நெய்
சீனியோடு கலப்பு மணம் புரிந்த
பனிக்கூழ் பால் கோவாவும்

உன்னுள்ளே நானும் என்னுள்ளே நீயுமென்று
பின்னிப்பிணைந்து vஜால் விடும் ஜாங்கிரியும்

கங்கா ஸ்நானம் போதுமா
சர்க்கரைப் பாகில் மு்ச்சடக்கி
முத்துக் குளிக்கும் குளோப் ஜாமு்னும்

கையுரலில் இடி வாங்கி தப்பியோடிப் போனாலும்
கலிபோர்னியா காட்டுத்தீயில் கருகிய
வெள்ளையெலிபோல் நம் அதிரசமும்

இப்படி முதிர்ச் சுவைப் பண்டங்களை
முந்தி முந்தி உண்டாலும்
தீபாவளி லேகியம் மட்டும்
லேசில் இறங்காது

மல்லிகையிடையே மரிக்கொழுந்தும் மணக்க
நம் மஞ்சள் மாதர்
தக தகவென தங்கத்தோடும்
சரசரக்கும் பட்டுடை மேனியோடும்
முக்தியடையந்த பூரணத்தில்
இன்று புதிதாய் பிறந்தோமென்றொரு
பட்சி பறந்திடும் மனத்திலே.

நா சுவை கூடியவுடன்
நகைச்சுவை வெடிகளும்
நடு நடுவே வெடிப்பதுண்டு
மனைவி கணவனிடம் கேட்டாள்
நாம் ஏன் தீபாவளிக் கொண்டாடவேண்டுமென்று
கணவரோ மிகுந்த பொறுப்போடு
நரகாசுரன் என்ற கொடியவன் இறந்த நாளை
நாம் கொண்டாடுகிறோமென்றார்
பட்டென்று சொன்னாள் மனைவி
நீங்கள் தான் இன்னும் இருக்கிறீர்களே என்று

எள்ளி நகையாடும் மாதர் தம் அடுத்தாத்து
அம்புஜத்தைப் பார்த்து விடும்
பெருமு்ச்சுக்கும் அளவில்லை

இன்று நாம் ரேசில் செல்லும் குதிரையாய்
எதையோத்தேடி ஓடினாலும்
பக்கத்து வீட்டுப் பைங்கிளி முகம் பார்க்க
சில திங்கள் ஆகிறது

உறவுகளின் அருமை
ஊனமாக்கினாலும்
பல்லின ரோஜாக்களின் வரவால்
புத்துயிர் பெறுகிறேhம்

அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்குள்
மின்னிடும் தீபாவளி
பட்டுத் தெறித்தது போல்
சிலப் பொட்டு வெடிச் சத்தம்
பட்டும் படாமல் கேட்டாலும்
அணுகுண்டு சரவெடி சத்தமின்றி
'சப்' பென்றுதான் இருக்கிறது

சிராங்கூன் ரோடு ரங்கோலி வளைவுகளில்
ஆசையெனும் செருப்பணிந்து
கண்களால் கடைகளை அளந்து நம்
இளங்கொடிகள் கடுகளவுப் பொட்டை கூட
விடாமல் தேடித் தேடி வாங்கி

'பெருமாளே' என்று கிரெடிட் கார்டு பிதுங்கினாலும்
project give counter ஐப் பார்த்தால்
காகம் போல் கரைகிறது மனம்
பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் சுகம் தானே...

நம் வீட்டு கெட்டி உருண்டை உடைகிறதோ இல்லையோ
உலக உருண்டை உதிர்வது தெரிகிறதா எவருக்கேனும்

முளை கட்டிய தாய்ப் பால் தானே சொட்டுவது போல்
அண்டார்டிகாவில் பனி உருகி வழிகிறதாம்

பனிப் பெருகி கடல் மட்டம் உயர்ந்தால்
உலகம் அழிவை நோக்கும் அபாயம் உண்டுதானே

ஐ.நா சபை அகிம்சை தினம் கொண்டாடும் வேளையில்
நம் ஹரோக்களுக்கு அடியும் உதையும் அரிவாளும்
அடையாளச் சின்னம்

புலிகள் மான் வேட்டைக்குச் செல்வதுண்டு
மனித வேட்டைக்குமள்ளவாச் செல்கின்றன.

கடிகார முள் மீதமர்ந்து
சிறு மு்ளையும் பெரு மு்ளையும்
உழைத்து உழைத்துக் களைக்கிறது
உடலும் ஊடலும் பெருக்கிறது

நம் நவீனத் தீபாவளி ஆத்மாவை
மனிதநேயத்தை கைப் பிடித்துச் செல்ல வேண்டும்

நஞ்சற்ற கள்ளங்கபடமற்ற தீபாவளியை
அடுத்த தலைமுறைக் கொண்டாடவேண்டும்

சகாராவில் காதல் பூ பூத்துக்கொண்டிருக்கும் போது
நம் நெஞ்சங்களில் புத்தொளிப் பிறக்காதா என்ன!

பட்டாம்பூச்சியின் கையில் சிறகைக்கொடுத்து
பறந்து வா என்று சொல்லி கூட்டுப்புழுவாக்க வேண்டாம்
சுற்றித் திரிந்து பறந்தோடி வா என்று விட்டு விடுவோம்

சென்றதினி மீளாது என்பதை இருத்தி
புன்னகை நட்பு காதலோடு கலந்துறவாடி
இன்று புதிதாய்ப் பிறக்கும் இந்த தீபாவளியோடு
நாமும் புதியாய் பிறப்போம் என்றும்
புதிதாய் இருப்போம்.


ஓலி 96.8 வானொலி - 10.11.2007

தீர்மானம்




சன்னலோரம் உட்கார்ந்து
தீர்மானம் பண்ணத் தொடங்கியபோது
நீள் இரவு நிமிடமாய் கரைந்தது
கடந்து வந்த பாதைகளில் மு்ழ்கி...

பகல் வருமென்று காத்திருந்து
வந்தது பகல் ஆனாலும்
விடியலில்லை இன்னும்.

இரவும் பகலும் மாறி மாறி வந்தாலும்
ஏக்கத்தில் தான் இன்னும்
அணுக்கள் ஜPவிக்கின்றன

ஆழ்மனத்தில் இன்னும்
வெறுமை மட்டுமே ரீங்காரமாய்...

மலையுச்சிக்குப் பறந்துச் சென்ற கழுகு
கரும் புறாவைக் கண்டு
களிக்கத்தான் செய்கிறது

வாழ்வு நமக்கு வைரங்களைத்தர
நாமோ வெள்ளியைக் கண்டு உழல்கிறோம்

அத்துனை மலர்களும் விதைகளைத் தந்தாலும்
இலைகளோடு இதழ்களுமாய் வருடங்களும்
உதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன

நிலக்கரியின் தீர்மானம் வைரமாகலாம்
உதடுகளின் தீர்மானம் புன்னகையாகலாம்

எழுதப்படாத சட்டங்களினால்
தீட்டப்படாத சித்திரங்களாய்
தீராத கனவுகளும்
வழிந்தோடும் தேவைகளும்
நம்மை ஆட்டிப்படைத்தாலும்
மனித நேயம் காப்போம் என்பது மட்டும்
நாம் எடுக்கப்படாத தீர்மானமாகட்டும்

நாள் - 29.12.2007

திங்கள், 30 ஏப்ரல், 2007

அமைதி



கவலை கழிந்து அமைதியில் வாழ
ஆர்வம் கொண்டேன்
தோன்றிய உலகில் சோதனைகளுக்கு
ஓய்வென்றுமில்லை
காரணமின்றி கடிந்து கொண்டன
கவலைகள்
நாகரிக சுகத்தில் நனைய
நினைத்ததில்
ஐம்புலனும் உணர்த்தியது
அறியாமையை
சுகத்திற்கு வடிவமில்லை
எல்லையில்லையென்று
ஆய்ந்து தெளிந்ததில்
எட்டியது எனக்கும்
அகந்தை அலை ஓய்ந்து
மூடியதிரை விலகியது
புலன்களை மூடிவிடு; எண்ணங்கள்
தரும் அமைதி என்றது ஆழ்மனம்
முயன்று பார்க்கிறேன் இன்றுவரை
எட்டாக்கனியாகவே
என்றாவது ஒரு நாள்
எனக்கும் திருவினையாகும்

வியாழன், 29 மார்ச், 2007

About Book


I have read the book 'Men are from Mars, Women are from Venus'. Its an excellent book and practical guide for improving communication and getting what we want in our relationships. Each men and women need to read.. It was written by John Gray, its a non-fiction but it will help us to understand each other better, its an invaluable tool for developing deeper and more satisfying relationships... I read but not sure my understanding develops deeper and deeper, I feel that my level of understanding move towards better....

the meal grows cold
the anger is allayed
the sore begins to heal
to consider deliberately
due to insatiable hunger
the grief has not abated
---- What is the meaning of the above, no specific meaning... but just like that...

செவ்வாய், 27 மார்ச், 2007

என் பார்வையில்


சில்லென்று ஒரு ஈரம் படர்ந்தது நெஞ்சில்
விசா வந்து விட்ட சேதி கேட்டு

அலைந்தது மனம் ஆயிரம் கனவுகளைச் சுமந்து
டிக்கெட் வாங்குமுன்னே சிங்கப்பூர் சென்று சென்று வந்தது

வத்தலும் ஊறுகாயும் வாஞ்சையோடு கட்டி
பட்டமிடும்போது வட்டமிட்டு பறந்த விமானத்தின் மடிகளில் இப்போது

குளிரின் நடுவில் வண்ண வண்ண சேலையில்
மயில்கள் அங்குமிங்கும் நடமாடி
புடம் போட்ட புன்னகையில் உபசரித்தன

சொர்க்க வாசல் ஏகாதசி அன்று மட்டுமா திறக்கும்
அந்த பரலோகச் சொர்க்கம் மண்ணுக்குள்ளே
எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது

ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் பார்த்த டால்பின்
பக்கத்தில் வந்து சிலுப்பிச் செல்கிறது

கயத்துமேல குச்சித்தூக்கி நடப்பதுண்டு
கார்முகிலைக் காண கயிரின் மேல் கார்களின் ஊர்வலம்

கண்டக்டரக் காணோம் பஸ்ல
டிரைவரையும் காணோம் டிரெய்ன்ல

தக தகவென தங்க மீன்களின் நாட்டியம் காண
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கடல்பெட்டி

எதிலும் எங்கேயும் பிரம்மாண்டம்
பலவினப் பல்லாக்குகளைப் பார்க்க நேர்ந்தாலும்

இயந்திரமாகிப்போன மனித வாழ்க்கையில்
மாறிவிடாத மனிதம் மட்டும் அப்படியே

திங்கள், 26 மார்ச், 2007

என்னை தூக்கி நிறுத்தியவற்றுள் ஒன்று

தேடிச்சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதை பேசி - பிறர்
வாட பல செயல் புரிந்து மனம் வாடி
துன்புமிக உழன்று -நரை
கூடி கிழப்பருவமெ ய்தி
கொடுங்கூற்றுக் கிரையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதர்களைப்போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

பெருவிரைவு இரயில்



கிழக்கும் மேற்குமாய்
தெற்கும் வடக்குமாய் உன்
ஒய்யாரா சிங்கை நகர் வலம்


விடியத் தவறினாலும் நொடி தவறாமல்
படு சுட்டியாய் பக்கத்தில் வந்து நிற்கிறாய்

செங்கதிரோணும் உன் வரவைக்கண்டுதான்
சோம்பலாய் துயிலெழுகிறான்

உன்னுடன் அமைதிப் பயணத்தில் ஆழ்ந்த
நித்திரையும் கைகூப்பி அழைக்கிறதே

தேன்முலாம் பூசிய சொற்களில்
அவ்வப்போது அறிவிப்புக் குயில் கூவி எழுப்புகிறது

அரைமணி அலுவல்
பயணமானாலும் என் கவி அருவி
ஊற்றெடுக்கும் உற்சாகத் தளமும் நீயே

உன்னைத்தேடி நாங்கள் நடக்கவில்லை
தாயைக் கண்ட குழந்தையாய் எங்களைத் தேடி
ஓடி வந்து சுமக்கிறாய்

நீ ஒரு மண்புழு தான்
மண்ணுக்கு உள்ளும் புறமும்
ஊர்ந்து விளையாடுகிறாய்
பூமிக்குள் மு்ச்சடக்கி வெளியில் வந்து விடுகிறாய்

சில நேரங்களில் உருமுகிறாய்
இத்தனைபேரை விழுங்கியும் இன்னுமா அடங்கவில்லை உன் தாகம்
அடங்காப் பசியோடு ஆட்களை அள்ளிக்கொண்டு போக
சிறுத்தைபோல் சீறி வருகிறாயே…

நீ பலருக்கு வரப்பானாய்
நீயின்றி வேறு வழியேது எங்களுக்கு

உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு
அனகோண்டாவை நினைக்கத் தூண்டுகிறது

நீ காற்றின் தோழனா இளங்காற்றில் கலந்து செல்லமாய்
நிலையங்களைத் தொட்டுத் தொட்டுச் செல்கிறாயே…

சோர்வின்றி முகிலாய் நீ அலைந்தாலும்
உன் புகழ் வேறு தேசம் சென்று
எரிவதெப்போது?

முள்ளும் மலரும்


முள்ளும் மலரும்

மலருக்கு முள் அழகு தான்
முள் மலரைக் குத்தினால்

இமை மு்டித் திறக்கும் முன்
மலரிதழில் கீறல்

வலி மறைந்து போனாலும்
வடு மறைவதில்லை
அந்த மடை திறந்தால் மடுபோல் நீளும்

மலர் வாசனை முள்ளுக்குச் சொந்தமானால்
மண்வாசனை மறத்தா போகும்

மலர் மணம் வீசலாம் - அதில்
தீபமேற்றினால்

முற்றிய முள்ளென்று நெருங்கிப் பார்த்தால்
குத்தியே ருசிகண்ட முள்
கீறியது நெருஞ்சியாய்

முள்மேல் மலர் விழுந்தால்
சேதாரம் இதழுக்குத்தான்

முள் குத்தி முறிந்திடுமா செடி
முள்ளில்லா மலரும் மணக்கிறதே