வரமாய் வந்த வருடம்
எங்கே சென்றது தேடினேன்
திரும்பி பார்க்க
திரும்பி பார்க்க
திரை வந்து மு்டியது
கைக்கு எட்டியது வாய்க்கு
எட்டுவதற்குள்
வருடமும் பறந்தது
முட்டித் தள்ளும் கண்ணீர்
கீழே விழுவதற்கு முன்
இதோ அடுத்த வருடம்
வந்து விட்டேன் என்கிறது
வந்து கொண்டிருக்கும் வருடத்தை
வாழ்த்தவும் முடியவில்லை
இறந்து கொண்டிருக்கும் வருடத்திற்காக
துக்கம் கொண்டாடவில்லை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் யதார்த்தங்களென்றரல்
இந்த நிமிடம் மட்டும்
எனக்குரியதாகட்டும்