Flowers - Myspace Glitters

திங்கள், 27 ஜூலை, 2009

நெருப்பில் தெரியும் நிலவு முகம்


இதயக்கோயிலில்
ஏற்றி வைத்த தீபமொன்று
முருங்கிப் போனத்திரியில்
தள்ளாடி நிற்க
வீசியடித்தக் காற்று
அதையுந் தட்டிச் சென்றுவிட

இருளுக்குளந்த இறைவனே
இறங்கி வந்து புது நெய்யில்
நல்ல திரியிட்டு
ஏற்றி வைத்துச்
சென்றதாகச் சொல்ல
நிலவில் பார்வை பதித்து
தீபம் சுடர்விட்டு எரிகின்றது

அந்த நிலவின் முகத்தை
மேகக்கரங்கள் தழுவினாலும்
என் கருவறைக்கதவுகள் மட்டுமின்னும்
திறந்தேக் கிடக்கிறது
இந்த நெருப்பிலாவது
தெரியுமா
அந்தக் கடவுளின் முகமென... J


ஞாயிறு, 19 ஜூலை, 2009

எனக்காக

கருவில் பிறந்து
இந்த மொட்டு
இன்னும்
துடிக்கிறது
எனக்காக...
Heart Glitter Graphics

செவ்வாய், 14 ஜூலை, 2009

உறங்கிடும் பூ


மகரந்தத்தில் மயங்கி
பூவுக்குள்
உறங்கிடும் பூவே
தேடலை நாடி ஓடி
வெடித்துச்சிதறிய
பஞ்சுகளுக்குள்ளே
தூக்கத்தை
தேடித் தேடி
கிட்டவில்லை இன்னும்
அமைதியான உறக்கம்
நீயாவது
நிம்மதியாய்
தூங்கிடு

ஞாயிறு, 12 ஜூலை, 2009


கிழட்டு யானையின்
முரட்டுப்பிடியில்
சிக்கித் தவித்த குருவி
திடீரென்று முதுகில்
குத்தி பறந்துச் செல்ல
கழுதைகள் படை சூழ
நகர்வலம் போய்
மூக்குடைந்த யானை
நிர்வாணமாய் நடுத்தெருவில்...

அறு



பேனாக் கத்தி
அறுக்கலாம்

பேனாவும்
சில நேரங்களில் நீயும்

எப்படி?

வியாழன், 2 ஜூலை, 2009

வெறுமை

Image and video hosting by TinyPic
வெள்ளைச் சுவற்றின்
கிறுக்கல்கள்

கிழித்தெறியும்
தாட்கள்

கசக்கிப் போடும்
காகிதங்கள்

கிறுக்கித் தள்ளும்
பென்சில் முனைகள்

கலைந்து கிடக்கும்
புத்தகங்கள்

வரைந்து தள்ளும்
கோட்டோவியங்கள்

வெறித்துப் பார்க்கும்
கரடி பொம்மை

கார்ட்டூனின்
கேள்வி பதில்கள்

பாடங்கேட்கும்
மிக்கி மவுஸ்

சொல்லச்சொல்ல
சொல்லுங் கிளி

விசிறி எறியும்
விளையாட்டு சாமான்கள்

மெளன மொழி
பேசும் விழிகள்

அத்தனையும் சொல்கிறது
இவளின் வெறுமையை

அசைந்தாடும்
பூங்கொடியாள்
முகத்தில்
துள்ளியோடும்
பட்டாம்பூச்சி