Flowers - Myspace Glitters

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இரைப்பை நிரப்ப
கோணிப்பையோடு
குப்பையை
சீய்க்கும்
கோழிகள்


வியாழன், 27 ஆகஸ்ட், 2009


உன் வருகையில்
அரும்புகிறது
என்னுள் நீ
நட்டு வைத்த மரம்

சனி, 22 ஆகஸ்ட், 2009

கடிகாரம்


இந்த ரோஜாவிற்குள் முட்கள்,
நாட்களை கடத்துகிறது


யாருக்காக


இருந்தும் மணக்கிறது
இறந்தும் மணக்கிறது
யாருக்கெனத் தெரியாமலே...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

யாரிவள்?

என்னிலிருந்து வந்தவள்?
என்னை நுழைந்து பார்த்தவள்?
என் புள்ளிகள் வரைந்த கோலம்?
என் உயிரோவியம்?
என் பிரதி?
என் நம்பிக்கை?
என் ஊன்றுகோல்?
என் விதையில் பூத்த பூ ?
என் அறுவடை?
என்னைப் பிரிந்து நிற்கும் நிழல்?
என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

விண்மீன்


விண்மீன்களே
நீர்
விண்ணில் முளைத்ததனால்
தப்பித்தீர்,
தவறி
மண்ணில் முளைத்திருப்பின்
உம்மையும்
கருவாடாக்கி
பையில் போட்டு
விற்றிருப்பர்

புதன், 5 ஆகஸ்ட், 2009

பாரினைக் காக்கும் பசுமை