Flowers - Myspace Glitters

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நார்வே நடந்து பார்த்தது
அமைதிப்புறா அலைந்து பார்த்தது
அகிம்சை அல்லல் பட்டது
ஆயுதம் தலை தூக்கியது
புலிகள் பதுங்குவது
பாய்வ‌த‌ற்கென்றாலும் கிளிகளின்
சிறகொடியும் ஒலிகள் கேட்கிறதா
வலிக்கிறது மனம்
சிறை பிடித்த
சீதையின் துயர்துடைக்க
அனுமன் சென்றான் தூது
முன்தோன்றிய
மூத்தக்குடி காக்க அதிபதிகள்
அணுவைக் கூட அனுப்பவில்லை தூது
முல்லைக் காடு இடுகாடாகிறது

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக்குமரன் -இலங்கையில் போர்நிறுத்தக் கோரி தீக்குளித்தவர்

அங்கேச் சுடுகிறான்
இங்கே சுட்டுக்கொண்டாய்

உன்னைப் பறித்தது
தமிழ்ப் பற்றோ
அரசியல் பற்றோ
நாட்டுப் பற்றோ...
உன் உயிர்ப் பற்று
எங்கேப் போனது?

பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமொன்றென
துதி பாடி
இரங்கற்பா எழுதிவிட்டு
தூசி தட்டி துப்பாக்கித்
தூக்கிவிட்டான்

ஆட்டுமந்தைபோல்
கை கால் இழந்து
பாம்புக் கடி மறத்தவனை
ஓருயிர்
சரித்திரம் மாற்றிவிடுமென
தப்புக் கணக்குப் போட்டாயே?

சாதிக்கப் பிறந்தவன் நான்
சாகப் பிறந்தவனில்லை யென
பாசக்கொடி நீ தூக்கி
அடக்குமுறையை
அடக்கம்
செய்ய மறந்தாயே?

உனக்கு நீயே
கொள்ளியிட்டாய்
உன் குடும்பத்தை
தவிக்கவிட்டாய்
உன் இழப்பைத் தவிர
வேறென்ன லாபம்?


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

துடுப்புகள்

உறங்கி கிடக்கும்
சொர்க்கத்தை உசுப்பிவிட
அறிவுக் கடலில் ஆழம் தேடி
உறங்கிப் போன மனிதர்களுக்கு
ஒளிந்து கிடக்கும் உண்மைகளை
அமிழ்ந்து போகும் அமுதங்களை
அடையாளம் காட்டத் துடிக்கும்
ஞானத் துடுப்புகள்
பேனா முட்களுடன்...

சனி, 31 ஜனவரி, 2009

நான்

தெரியுமென்றேன்
தேடுதல் குறைந்தது

வேண்டாமென்றேன்
தௌpவு குறைந்தது

முடியாதென்றேன்
திறமை குறைந்தது

மேம்போக்காகவிருந்தேன்
உற்சாகம் குறைந்தது

பகிர்ந்து கொண்டேன்
அனுபவம் கிடைத்தது

திருத்திக் கொண்டேன்
தவறுகள் குறைந்தது

உணர்ந்து கொண்டேன்
அறிதலின் இரகசியத்தை

புரிந்து கொண்டேன்
அறிவுப்பசி தான்
ஆழ உழுமென்று

நம்பிக்கை


பாலும் தேனும்
பார்த்து பார்த்து
ஊட்டவில்லை

அந்தக் கால்
இந்தக் கால்
பந்தக் கால்
பாசக்கால்

என எந்தக் காலும்
வேண்டாமுன்
சொந்தக் காலில் நில்
என ஊட்டி
வளர்த்ததால்தானோ
என்னவோ

நாற்றங்காலை
நாடு மாற்றி
நட்டபின்னும்
ஒட்டுறவின்றி
ஒற்றைக்காலிலும்
ஊன்றி நிற்கின்றேன்

பிரிவு

விழியோடு விரல்
பேச நேரமில்லை
விழியின் கசிவைத் துடைக்க
விரலுக்கு நேரமில்லை
விரலின் வீக்கம் காண
விழிகளுக்கு நேரமில்லை
உனக்கு நொட்டப்
பார்வையென விரலும்
நீ குட்டிக்கொண்டேயிரு
என விழியும் கட்டிப்புரண்டபின்
இனி விரலுக்கும்
விழிக்குமேது பந்தம்










வியாழன், 29 ஜனவரி, 2009

நிழல்கள்

என்னைப் பின் தொடரும்
நீ உளவாளியா அல்லது
கரும்பூனை காவலாளியா

நடந்தால் நடக்கிறரய்
நின்றரல் நிற்கிறரய்
நான் சொன்னபடி கேட்கும்
ஒரே ஜPவன் நீ

கருப்பு மையில் வார்த்தெடுத்த
என் குளோனிங்
என் இருண்டப் பக்கம்

இரவைக் கண்டால்

ஒட்டிக் கொள்கிறரய்
இரவியைக் கண்டால்
ஓடி விடுகிறhய்

நான் நிற்கும்போது
நீ மட்டும் படுத்திருக்கிறரயென
உன்னைத் துரத்தி துரத்தி
மிதிக்க முனைந்த நாட்கள்
இன்னும் நினைவில்

திட்டினாலும் அழுவதில்லை
வெட்டினாலும் நகர்வதில்லை
நாம் ஒட்டிப் பிறந்த
இரட்டைப் பிறவிகள்

ஆனால் ஆச்சர்யம்
எனக்கில்லாத பொறுமை
உனக்கு மட்டுமெப்படி


இருளைக் கொளுத்தும்

விளக்குகள்

தீவிரவாதம்


நாலு கழுதை வயாசானாலும்
நாலு மணிக்கு எழுந்து
புளோக்கை
கூட்டிப் பெருக்கி
கழுவி துடைச்சி
வாசலுக்கு வரும்
லட்சுமியை வரவேற்க
புள்ளிப் போட்ட
வெள்ளை போர்வை
எலும்பை மறைக்க
மாக்கோலம் போட
மறந்து போய்
வியந்து நிற்கும்
சீனப்பாட்டி

புதன், 28 ஜனவரி, 2009

நேற்று
Beautiful என்றரல் என்ன அர்த்தம் அப்பா ?
அழகு என்று பொருள்டா கண்ணா.. -
இன்று
அழகு என்றரல் என்னர்த்தம் அம்மா ?
Beautfiful டா செல்லம்
நாளை
Friends do you know what is Alagu?
don't need to know lah
you just know the word enough lah

செவ்வாய், 30 டிசம்பர், 2008

இந்த நிமிடம் மட்டும்

வரமாய் வந்த வருடம்
எங்கே சென்றது தேடினேன்
திரும்பி பார்க்க
திரை வந்து மு்டியது
கைக்கு எட்டியது வாய்க்கு
எட்டுவதற்குள்
வருடமும் பறந்தது
முட்டித் தள்ளும் கண்ணீர்
கீழே விழுவதற்கு முன்
இதோ அடுத்த வருடம்
வந்து விட்டேன் என்கிறது
வந்து கொண்டிருக்கும் வருடத்தை
வாழ்த்தவும் முடியவில்லை
இறந்து கொண்டிருக்கும் வருடத்திற்காக
துக்கம் கொண்டாடவில்லை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் யதார்த்தங்களென்றரல்
இந்த நிமிடம் மட்டும்
எனக்குரியதாகட்டும்

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

முக வரிகள்

கல்லரைகளே
இல்லமாகிவிட்டால்
சவங்கள் யார்

நாக்கின்
பச்சை நரம்புகள்
செத்து தான் கிடக்கின்றன

எச்சில் இலை தான்
மிச்சம் என்றhலும்
நக்கி தான்
தீர வேண்டியிருக்கிறது.

வியர்வையில் நீ
குளித்து கோலமிட்டாலும்
தண்ணீரில் குளிர் காய்கிறது
முதலைகள்

எட்டி எட்டி வளர்ந்தாலும்
வெட்டியே பழக்கப்பட்ட
நகத்தின்
நுனியில் மட்டுமே
ஒட்டிக்கொண்டிருக்கிறது
மருதாணி

முகவரிகள் மாறினாலும்
முக வரிகள் மட்டும் அப்படியே


வெள்ளி

நட்சத்திரர்களின்
கண் பட்டுவிடாமல்
வெண்பஞ்சு மெத்தைக்குள்
ஒளிந்து கிடக்கிறது
வெள்ளி நிலா
எட்டி எட்டி பிடித்தாலும்
கரும்போர்வைக்குள்
கண்ணாமு்ச்சு ஆடுகிறது
முதல் தேதி மட்டும்
முழு முகம்
காட்டிச் சிரிக்கிறது

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்த
சிந்திய துளிகளை
அள்ளிப் பார்த்தேன்
அத்தனையும்
வெள்ளிக் காசுகள்

சனி, 26 ஜூலை, 2008

ஊதுபத்தி எரிந்து
ஒரு புறம்
மணம் வீசினாலும்
மறுபுறம்
சாம்பாலாகிக்
கொண்டிருக்கிறது
விலக்கி வைக்கப்பட்ட
மணப்பெண் போல்

தினசரி
தேதித்தாள்
கிழித்து எறிந்தபின்
அட்டை மட்டும்
தனிமையில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
முதியோர் இல்லத்தில்

புதன், 23 ஜூலை, 2008

நேசம்

நான் அம்மாவை மட்டும் நேசிக்கிறேன்
அவளும் நேசிக்கிறரள்
முழு நேர வேலையையும்

பகுதி நேரமாக என்னையும்

வியாழன், 10 ஜூலை, 2008

திறந்து கிடந்த
இதய வெற்றிடத்தில்
பூ ஒன்று
புயலாய் புகுந்தது
கிள்ளி எறியவுமில்லை
எடுத்து நுகரவுமில்லை
மயக்கியது வாசனை
இதயக்கூடு
இறுக மு்டிக்கொண்டது
இறக்கிவிட மனமின்றி

புதன், 9 ஜூலை, 2008

அது இது

அது பிடிக்காததால்
இது பிடித்தது
இது பிடித்ததனால்
அது பிடிக்கலையோ
அது பிடித்திருந்தால்
இது பிடிக்குமோ
இது பிடிக்காமற்போயிருந்தால்
அது பிடிக்குமோ
எது எப்படியோ
அது மட்டும் அப்படியே

புதன், 11 ஜூன், 2008

Make Better Choices! ...


நீயே முடிவு செய்
எதைச் செய்வது எதை விடுவது
உன் மனதை நீயே
தீர்மானிக்க விடு
முன்னே செல்வதா பின்னே செல்வதா
எட்டி நிற்கும் உன் குறிக்கோளை
எட்டிப் பிடி அல்லது
நிற்குமிடம் போதுமென மகிழ்ந்திடு



"You are the person who has to decide.
Whether you'll do it or toss it aside;
You are the person who makes up your mind.
Whether you'll lead or will linger behind.
Whether you'll try for the goal that's afar.
Or just be contented to stay where you are."

-Edgar A. Guest

"Make Better Choices! ... If you don't change what you are doing ... the same things will keep happening!