Flowers - Myspace Glitters

புதன், 4 நவம்பர், 2009

தீஞ்சுவை

‘மெக்டனால்டு’ வாசலி்ல்
நி
ன்

கூட்டம் திடீரென
கலைந்தது

பட்டுப்பூச்சி
பறந்து வந்ததோ
திரும்பிய போது
எண்புதோல் போர்த்தி
நடந்து வந்த உயிரி
வரிசையில் நிற்க…

கலைந்தது கூட்டம்
உனக்கு விற்பனையில்லையென
கடைக்காரன் விரட்டியடிக்க
வாசலில் வந்தமர்ந்தான்

பரதேசிக்கு
‘பர்கர்’ ஒரு கேடா
தொடை தட்டி
‘தடா’ போட்டதொருக் கூட்டம்

பிஞ்சு மொழி
கேட்டதங்கே
‘அவர்கள் சாப்பிட்டால்
தவறா’ வென

‘உன் தட்டைப் பார்த்து
சாப்பிட்டு விட்டு
எழுந்து வா’
கோபப்பழம் சிவந்தது

அந்த பிஞ்சுக் கரங்கள்
தன் ரொட்டித் துண்டை
தூக்கி வந்து அவன்
தட்டில் போட

தேங்கியக் கண்ணீரை
துடைக்கத் துணியின்றி
முத்தமிட துடித்த உயிரி
எலும்பு கண்ட
பெட்டை நாயாய்
மூலையில் ஒடுங்கிச்
சிரித்தது நன்றியோடு

இந்த
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண
அந்தக் கிளிகள்
தயாராயிருக்க

நெருப்புக் கோழிகளே…
உந்தன் தீஞ்சுவையை
அதன் மேல்
திணிக்காமலிருப்பதே
நிந்தன்
தலையாய தர்மமன்றோ…

2 கருத்துகள்:

panasai சொன்னது…

manithabimanam milirum kavithai.. romba nalla irukku..

பாலு மணிமாறன் சொன்னது…

ரொம்ப நன்றி...ரொம்ப நல்லவர்களுக்கு ரொம்ப நன்றியைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்?