திங்கள், 26 மார்ச், 2007
பெருவிரைவு இரயில்
கிழக்கும் மேற்குமாய்
தெற்கும் வடக்குமாய் உன்
ஒய்யாரா சிங்கை நகர் வலம்
விடியத் தவறினாலும் நொடி தவறாமல்
படு சுட்டியாய் பக்கத்தில் வந்து நிற்கிறாய்
செங்கதிரோணும் உன் வரவைக்கண்டுதான்
சோம்பலாய் துயிலெழுகிறான்
உன்னுடன் அமைதிப் பயணத்தில் ஆழ்ந்த
நித்திரையும் கைகூப்பி அழைக்கிறதே
தேன்முலாம் பூசிய சொற்களில்
அவ்வப்போது அறிவிப்புக் குயில் கூவி எழுப்புகிறது
அரைமணி அலுவல்
பயணமானாலும் என் கவி அருவி
ஊற்றெடுக்கும் உற்சாகத் தளமும் நீயே
உன்னைத்தேடி நாங்கள் நடக்கவில்லை
தாயைக் கண்ட குழந்தையாய் எங்களைத் தேடி
ஓடி வந்து சுமக்கிறாய்
நீ ஒரு மண்புழு தான்
மண்ணுக்கு உள்ளும் புறமும்
ஊர்ந்து விளையாடுகிறாய்
பூமிக்குள் மு்ச்சடக்கி வெளியில் வந்து விடுகிறாய்
சில நேரங்களில் உருமுகிறாய்
இத்தனைபேரை விழுங்கியும் இன்னுமா அடங்கவில்லை உன் தாகம்
அடங்காப் பசியோடு ஆட்களை அள்ளிக்கொண்டு போக
சிறுத்தைபோல் சீறி வருகிறாயே…
நீ பலருக்கு வரப்பானாய்
நீயின்றி வேறு வழியேது எங்களுக்கு
உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு
அனகோண்டாவை நினைக்கத் தூண்டுகிறது
நீ காற்றின் தோழனா இளங்காற்றில் கலந்து செல்லமாய்
நிலையங்களைத் தொட்டுத் தொட்டுச் செல்கிறாயே…
சோர்வின்றி முகிலாய் நீ அலைந்தாலும்
உன் புகழ் வேறு தேசம் சென்று
எரிவதெப்போது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக