Flowers - Myspace Glitters

செவ்வாய், 27 மார்ச், 2007

என் பார்வையில்


சில்லென்று ஒரு ஈரம் படர்ந்தது நெஞ்சில்
விசா வந்து விட்ட சேதி கேட்டு

அலைந்தது மனம் ஆயிரம் கனவுகளைச் சுமந்து
டிக்கெட் வாங்குமுன்னே சிங்கப்பூர் சென்று சென்று வந்தது

வத்தலும் ஊறுகாயும் வாஞ்சையோடு கட்டி
பட்டமிடும்போது வட்டமிட்டு பறந்த விமானத்தின் மடிகளில் இப்போது

குளிரின் நடுவில் வண்ண வண்ண சேலையில்
மயில்கள் அங்குமிங்கும் நடமாடி
புடம் போட்ட புன்னகையில் உபசரித்தன

சொர்க்க வாசல் ஏகாதசி அன்று மட்டுமா திறக்கும்
அந்த பரலோகச் சொர்க்கம் மண்ணுக்குள்ளே
எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது

ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் பார்த்த டால்பின்
பக்கத்தில் வந்து சிலுப்பிச் செல்கிறது

கயத்துமேல குச்சித்தூக்கி நடப்பதுண்டு
கார்முகிலைக் காண கயிரின் மேல் கார்களின் ஊர்வலம்

கண்டக்டரக் காணோம் பஸ்ல
டிரைவரையும் காணோம் டிரெய்ன்ல

தக தகவென தங்க மீன்களின் நாட்டியம் காண
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கடல்பெட்டி

எதிலும் எங்கேயும் பிரம்மாண்டம்
பலவினப் பல்லாக்குகளைப் பார்க்க நேர்ந்தாலும்

இயந்திரமாகிப்போன மனித வாழ்க்கையில்
மாறிவிடாத மனிதம் மட்டும் அப்படியே

கருத்துகள் இல்லை: