Flowers - Myspace Glitters

செவ்வாய், 30 டிசம்பர், 2008

இந்த நிமிடம் மட்டும்

வரமாய் வந்த வருடம்
எங்கே சென்றது தேடினேன்
திரும்பி பார்க்க
திரை வந்து மு்டியது
கைக்கு எட்டியது வாய்க்கு
எட்டுவதற்குள்
வருடமும் பறந்தது
முட்டித் தள்ளும் கண்ணீர்
கீழே விழுவதற்கு முன்
இதோ அடுத்த வருடம்
வந்து விட்டேன் என்கிறது
வந்து கொண்டிருக்கும் வருடத்தை
வாழ்த்தவும் முடியவில்லை
இறந்து கொண்டிருக்கும் வருடத்திற்காக
துக்கம் கொண்டாடவில்லை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் யதார்த்தங்களென்றரல்
இந்த நிமிடம் மட்டும்
எனக்குரியதாகட்டும்

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

முக வரிகள்

கல்லரைகளே
இல்லமாகிவிட்டால்
சவங்கள் யார்

நாக்கின்
பச்சை நரம்புகள்
செத்து தான் கிடக்கின்றன

எச்சில் இலை தான்
மிச்சம் என்றhலும்
நக்கி தான்
தீர வேண்டியிருக்கிறது.

வியர்வையில் நீ
குளித்து கோலமிட்டாலும்
தண்ணீரில் குளிர் காய்கிறது
முதலைகள்

எட்டி எட்டி வளர்ந்தாலும்
வெட்டியே பழக்கப்பட்ட
நகத்தின்
நுனியில் மட்டுமே
ஒட்டிக்கொண்டிருக்கிறது
மருதாணி

முகவரிகள் மாறினாலும்
முக வரிகள் மட்டும் அப்படியே


வெள்ளி

நட்சத்திரர்களின்
கண் பட்டுவிடாமல்
வெண்பஞ்சு மெத்தைக்குள்
ஒளிந்து கிடக்கிறது
வெள்ளி நிலா
எட்டி எட்டி பிடித்தாலும்
கரும்போர்வைக்குள்
கண்ணாமு்ச்சு ஆடுகிறது
முதல் தேதி மட்டும்
முழு முகம்
காட்டிச் சிரிக்கிறது

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்த
சிந்திய துளிகளை
அள்ளிப் பார்த்தேன்
அத்தனையும்
வெள்ளிக் காசுகள்

சனி, 26 ஜூலை, 2008

ஊதுபத்தி எரிந்து
ஒரு புறம்
மணம் வீசினாலும்
மறுபுறம்
சாம்பாலாகிக்
கொண்டிருக்கிறது
விலக்கி வைக்கப்பட்ட
மணப்பெண் போல்

தினசரி
தேதித்தாள்
கிழித்து எறிந்தபின்
அட்டை மட்டும்
தனிமையில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
முதியோர் இல்லத்தில்

புதன், 23 ஜூலை, 2008

நேசம்

நான் அம்மாவை மட்டும் நேசிக்கிறேன்
அவளும் நேசிக்கிறரள்
முழு நேர வேலையையும்

பகுதி நேரமாக என்னையும்

வியாழன், 10 ஜூலை, 2008

திறந்து கிடந்த
இதய வெற்றிடத்தில்
பூ ஒன்று
புயலாய் புகுந்தது
கிள்ளி எறியவுமில்லை
எடுத்து நுகரவுமில்லை
மயக்கியது வாசனை
இதயக்கூடு
இறுக மு்டிக்கொண்டது
இறக்கிவிட மனமின்றி

புதன், 9 ஜூலை, 2008

அது இது

அது பிடிக்காததால்
இது பிடித்தது
இது பிடித்ததனால்
அது பிடிக்கலையோ
அது பிடித்திருந்தால்
இது பிடிக்குமோ
இது பிடிக்காமற்போயிருந்தால்
அது பிடிக்குமோ
எது எப்படியோ
அது மட்டும் அப்படியே

புதன், 11 ஜூன், 2008

Make Better Choices! ...


நீயே முடிவு செய்
எதைச் செய்வது எதை விடுவது
உன் மனதை நீயே
தீர்மானிக்க விடு
முன்னே செல்வதா பின்னே செல்வதா
எட்டி நிற்கும் உன் குறிக்கோளை
எட்டிப் பிடி அல்லது
நிற்குமிடம் போதுமென மகிழ்ந்திடு



"You are the person who has to decide.
Whether you'll do it or toss it aside;
You are the person who makes up your mind.
Whether you'll lead or will linger behind.
Whether you'll try for the goal that's afar.
Or just be contented to stay where you are."

-Edgar A. Guest

"Make Better Choices! ... If you don't change what you are doing ... the same things will keep happening!

செவ்வாய், 18 மார்ச், 2008

புது உலகம்

நட்சத்திரங்களை எண்ணி முடிக்க
மொட்டை மாடியில் காத்துக் கிடந்த
நினைவுகளோடு

அதிகாலை புகைவிடும்
குளிர்வானம் பார்த்து
கொஞ்சம் யோசிக்கிறேன்

பூக்க மறுக்கும் ரோஜரவைப் போல்
சில நேரங்களில் சிரிக்க மறுக்கிறேன்

என்னை மட்டுமே காட்டிய கண்ணாடி
என் கடுகடுப்பைக் கண்டு சிரிக்கிறது

சினத்தின் கோரப்பிடியில் ப்ரியங்கள்
அழுகிப்போகின்றன

கடித்த ஆப்பிளின் கறைதான் தெரிகிறது
எஞ்சியிருக்கும் கனி கடிபட்டுக்கிடக்கிறது

முகத்தில் சிரிப்போடும்
முதுகில்; ஆயுதத்தோடும்
இன்று மட்டுமே மின்னிச் செல்லும் உறவுகள்

என்னைத் தீண்டிச் செல்லும் தென்றல்
சொல்லும் என் தனிமையும் மென்மையும்

புயலாய் வாழ்வு ஓடுமென்றரலும்
கனவுகள் வந்து து{க்கம் கலைக்கிறது

பட்டொளி வீசி பகற்கனவுகள் பறந்து வந்து
என்ன செய்யும் அலட்சியமும் கூடவே

கடந்துபோன காயங்கள்
வேதனையை
வெறுமையை தந்தாலும் - அவை
என் மேல் பட்ட தூசி தான்
தட்டிச் செல்ல எத்துனை துளியாகும்?

வாழ்வு மலர்ச்செண்டு கொடுத்து
நிழலை மட்டுமேத் துணைக்கு அனுப்புகிறது

தங்கத் தாமரையில் அமர்ந்து
சரசுவதியாகவும் ஆசைதான்

சிற்பி கையில் சிலையாகவில்லையானால்
குயவன் கையில் பானையாகலாம்

பூக்கள் வாடினாலும் மொட்டுக்கள்
முடிந்து போவதில்லை

பழுத்துவிழும் இலைகளைக் கண்டு
மரங்கள் அழுவதில்லை

உள் மனம் ஓயாமல் சொல்கிறது
காய்ந்த சருகின் விரைப்பை விட்டு
வளைந்து நௌpயும் இலையின்
மென்மை வேண்டுமென்று

ஒற்றைப் புல்லின் கூரிய நோக்கும்
சீரிய பார்வையுமே சிந்திக்கத் து{ண்டுகிறது

நிலையற்றது வாழ்க்கை நதி
மாற்றங்கள் மட்டுமே நம்மை புதுப்பிக்கும் வழி

எண்ணங்களுக்கு புது
வண்ணக் கலவை பூசி
புதியதோர் உலகுக்கு
புதுமனைப் புகுவிழா செய்வோம்

அவ்வுலகில்
இயற்கையும் அமைதியும் மட்டுமே
உலா வரட்டும்
வாடும் போது
வராது
வசதிக்குப் பின்
வரும்

ஒலி

விண்ணோடும் முகிலோடும்
கொஞ்சும் ஒலி
பண்ணோடு துயில்
கலைக்கும் விழி
செவி மடுத்தால் பறந்திடும்
கவலை வலி
செவிக்குணவை நித்தம்
வழங்கிடும் களி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2008

மகரந்தத்தின் மகசூல்
பூக்களின் புண்ணியம்
வேரின் எச்சம்
வேரின் மூலம்
விழுதுகளின் நண்பன்
கனி பெற்றெடுக்கும்
குழந்தை

இன்று புதிதாய் பிறப்போம்




இன்று புதிதாய்ப் பிறப்போம் எனறெந்தன்
தலைப்பை இயம்பியவுடன்
நினைவில் வந்து சென்றான் மா கவி
எண்ணமதைத் திண்ணமுற இசைத்து என்று.

தேனில் விழுந்த ஈ போல் நம்
பழைய வழக்கங்கள் மு்த்தப் பொய்களானாலும்
பண்பாடு என்று சொல்லி களிப்போடு
மையல் கொள்ளும் இந்த தீபாவளி

மயிலிறகின் வருடலோடு
சில நிழலோவியங்கள்
நெஞ்சில் நிறைவாய் என்றும்...

நல் பச்சரிசி மாவெடுத்து
பக்குவமாய் அதை அரைத்து
மனமுருகி மாக்கோலமிட்டு பின்
கை நிறைய மனம் நிறைய
மறக்காமல் உள்ளங்கால் நிறைய
மருதாணியிட்டு
கை கால் நீட்டி
நெட்டியும் முறித்து நீண்டு படுத்தால்
மத்தாப்பூச் சிரிப்போடும்
மருதாணிச் சிகப்போடும்
இடியுடன் கூடிய சரவெடிச் சத்தத்தில்
தீப்பொறிப் பறக்க
தீபாவளிப் பிறக்கும்.

பட்டாசுப் புகையுனுள் பகலவனும்
பதுங்கியே வருவான்

இதழோரம் அமிழ்தூறும்
பட்சணமில்லா பண்டிகையா
உரல் நழுவி சுருண்டு விழும்
மொறு மொறு தேன் குழலும்

பாலின் சுவையில் பாய்ந்த நெய்
சீனியோடு கலப்பு மணம் புரிந்த
பனிக்கூழ் பால் கோவாவும்

உன்னுள்ளே நானும் என்னுள்ளே நீயுமென்று
பின்னிப்பிணைந்து vஜால் விடும் ஜாங்கிரியும்

கங்கா ஸ்நானம் போதுமா
சர்க்கரைப் பாகில் மு்ச்சடக்கி
முத்துக் குளிக்கும் குளோப் ஜாமு்னும்

கையுரலில் இடி வாங்கி தப்பியோடிப் போனாலும்
கலிபோர்னியா காட்டுத்தீயில் கருகிய
வெள்ளையெலிபோல் நம் அதிரசமும்

இப்படி முதிர்ச் சுவைப் பண்டங்களை
முந்தி முந்தி உண்டாலும்
தீபாவளி லேகியம் மட்டும்
லேசில் இறங்காது

மல்லிகையிடையே மரிக்கொழுந்தும் மணக்க
நம் மஞ்சள் மாதர்
தக தகவென தங்கத்தோடும்
சரசரக்கும் பட்டுடை மேனியோடும்
முக்தியடையந்த பூரணத்தில்
இன்று புதிதாய் பிறந்தோமென்றொரு
பட்சி பறந்திடும் மனத்திலே.

நா சுவை கூடியவுடன்
நகைச்சுவை வெடிகளும்
நடு நடுவே வெடிப்பதுண்டு
மனைவி கணவனிடம் கேட்டாள்
நாம் ஏன் தீபாவளிக் கொண்டாடவேண்டுமென்று
கணவரோ மிகுந்த பொறுப்போடு
நரகாசுரன் என்ற கொடியவன் இறந்த நாளை
நாம் கொண்டாடுகிறோமென்றார்
பட்டென்று சொன்னாள் மனைவி
நீங்கள் தான் இன்னும் இருக்கிறீர்களே என்று

எள்ளி நகையாடும் மாதர் தம் அடுத்தாத்து
அம்புஜத்தைப் பார்த்து விடும்
பெருமு்ச்சுக்கும் அளவில்லை

இன்று நாம் ரேசில் செல்லும் குதிரையாய்
எதையோத்தேடி ஓடினாலும்
பக்கத்து வீட்டுப் பைங்கிளி முகம் பார்க்க
சில திங்கள் ஆகிறது

உறவுகளின் அருமை
ஊனமாக்கினாலும்
பல்லின ரோஜாக்களின் வரவால்
புத்துயிர் பெறுகிறேhம்

அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்குள்
மின்னிடும் தீபாவளி
பட்டுத் தெறித்தது போல்
சிலப் பொட்டு வெடிச் சத்தம்
பட்டும் படாமல் கேட்டாலும்
அணுகுண்டு சரவெடி சத்தமின்றி
'சப்' பென்றுதான் இருக்கிறது

சிராங்கூன் ரோடு ரங்கோலி வளைவுகளில்
ஆசையெனும் செருப்பணிந்து
கண்களால் கடைகளை அளந்து நம்
இளங்கொடிகள் கடுகளவுப் பொட்டை கூட
விடாமல் தேடித் தேடி வாங்கி

'பெருமாளே' என்று கிரெடிட் கார்டு பிதுங்கினாலும்
project give counter ஐப் பார்த்தால்
காகம் போல் கரைகிறது மனம்
பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் சுகம் தானே...

நம் வீட்டு கெட்டி உருண்டை உடைகிறதோ இல்லையோ
உலக உருண்டை உதிர்வது தெரிகிறதா எவருக்கேனும்

முளை கட்டிய தாய்ப் பால் தானே சொட்டுவது போல்
அண்டார்டிகாவில் பனி உருகி வழிகிறதாம்

பனிப் பெருகி கடல் மட்டம் உயர்ந்தால்
உலகம் அழிவை நோக்கும் அபாயம் உண்டுதானே

ஐ.நா சபை அகிம்சை தினம் கொண்டாடும் வேளையில்
நம் ஹரோக்களுக்கு அடியும் உதையும் அரிவாளும்
அடையாளச் சின்னம்

புலிகள் மான் வேட்டைக்குச் செல்வதுண்டு
மனித வேட்டைக்குமள்ளவாச் செல்கின்றன.

கடிகார முள் மீதமர்ந்து
சிறு மு்ளையும் பெரு மு்ளையும்
உழைத்து உழைத்துக் களைக்கிறது
உடலும் ஊடலும் பெருக்கிறது

நம் நவீனத் தீபாவளி ஆத்மாவை
மனிதநேயத்தை கைப் பிடித்துச் செல்ல வேண்டும்

நஞ்சற்ற கள்ளங்கபடமற்ற தீபாவளியை
அடுத்த தலைமுறைக் கொண்டாடவேண்டும்

சகாராவில் காதல் பூ பூத்துக்கொண்டிருக்கும் போது
நம் நெஞ்சங்களில் புத்தொளிப் பிறக்காதா என்ன!

பட்டாம்பூச்சியின் கையில் சிறகைக்கொடுத்து
பறந்து வா என்று சொல்லி கூட்டுப்புழுவாக்க வேண்டாம்
சுற்றித் திரிந்து பறந்தோடி வா என்று விட்டு விடுவோம்

சென்றதினி மீளாது என்பதை இருத்தி
புன்னகை நட்பு காதலோடு கலந்துறவாடி
இன்று புதிதாய்ப் பிறக்கும் இந்த தீபாவளியோடு
நாமும் புதியாய் பிறப்போம் என்றும்
புதிதாய் இருப்போம்.


ஓலி 96.8 வானொலி - 10.11.2007

தீர்மானம்




சன்னலோரம் உட்கார்ந்து
தீர்மானம் பண்ணத் தொடங்கியபோது
நீள் இரவு நிமிடமாய் கரைந்தது
கடந்து வந்த பாதைகளில் மு்ழ்கி...

பகல் வருமென்று காத்திருந்து
வந்தது பகல் ஆனாலும்
விடியலில்லை இன்னும்.

இரவும் பகலும் மாறி மாறி வந்தாலும்
ஏக்கத்தில் தான் இன்னும்
அணுக்கள் ஜPவிக்கின்றன

ஆழ்மனத்தில் இன்னும்
வெறுமை மட்டுமே ரீங்காரமாய்...

மலையுச்சிக்குப் பறந்துச் சென்ற கழுகு
கரும் புறாவைக் கண்டு
களிக்கத்தான் செய்கிறது

வாழ்வு நமக்கு வைரங்களைத்தர
நாமோ வெள்ளியைக் கண்டு உழல்கிறோம்

அத்துனை மலர்களும் விதைகளைத் தந்தாலும்
இலைகளோடு இதழ்களுமாய் வருடங்களும்
உதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன

நிலக்கரியின் தீர்மானம் வைரமாகலாம்
உதடுகளின் தீர்மானம் புன்னகையாகலாம்

எழுதப்படாத சட்டங்களினால்
தீட்டப்படாத சித்திரங்களாய்
தீராத கனவுகளும்
வழிந்தோடும் தேவைகளும்
நம்மை ஆட்டிப்படைத்தாலும்
மனித நேயம் காப்போம் என்பது மட்டும்
நாம் எடுக்கப்படாத தீர்மானமாகட்டும்

நாள் - 29.12.2007