வெள்ளி, 8 பிப்ரவரி, 2008
தீர்மானம்
சன்னலோரம் உட்கார்ந்து
தீர்மானம் பண்ணத் தொடங்கியபோது
நீள் இரவு நிமிடமாய் கரைந்தது
கடந்து வந்த பாதைகளில் மு்ழ்கி...
பகல் வருமென்று காத்திருந்து
வந்தது பகல் ஆனாலும்
விடியலில்லை இன்னும்.
இரவும் பகலும் மாறி மாறி வந்தாலும்
ஏக்கத்தில் தான் இன்னும்
அணுக்கள் ஜPவிக்கின்றன
ஆழ்மனத்தில் இன்னும்
வெறுமை மட்டுமே ரீங்காரமாய்...
மலையுச்சிக்குப் பறந்துச் சென்ற கழுகு
கரும் புறாவைக் கண்டு
களிக்கத்தான் செய்கிறது
வாழ்வு நமக்கு வைரங்களைத்தர
நாமோ வெள்ளியைக் கண்டு உழல்கிறோம்
அத்துனை மலர்களும் விதைகளைத் தந்தாலும்
இலைகளோடு இதழ்களுமாய் வருடங்களும்
உதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன
நிலக்கரியின் தீர்மானம் வைரமாகலாம்
உதடுகளின் தீர்மானம் புன்னகையாகலாம்
எழுதப்படாத சட்டங்களினால்
தீட்டப்படாத சித்திரங்களாய்
தீராத கனவுகளும்
வழிந்தோடும் தேவைகளும்
நம்மை ஆட்டிப்படைத்தாலும்
மனித நேயம் காப்போம் என்பது மட்டும்
நாம் எடுக்கப்படாத தீர்மானமாகட்டும்
நாள் - 29.12.2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக