Flowers - Myspace Glitters

வெள்ளி, 12 ஜூன், 2009

அழகானப் பொய்

அழகான முடிச்சுகளின்
நெளிவு சுளிவுகளோடு
பட்டுக்குள் ஒளித்து
மோதிரப்பரிசு தந்தாய்

நாட்கள் தன்னைத்தானே
சுற்றி சூரியனை ஓர் வலம்
வந்து முடித்தபோது
பட்டுச்சேலை பரிசு தந்தாய்

குழந்தையொன்று
அம்மையப்பனைச்
சுற்றி வந்து நின்ற போது
பருத்திச்சேலை பரிசு தந்தாய்

அடுத்தடுத்தாண்டுகளில்
வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகளோடு
காகிதப் பரிசானது

பரபரவென்று
பத்தாண்டைத் தொட்டுவிட்டது
பத்து பவுன் நகையோடு நீ
வருவாயென இருந்தேன்

பத்திரமாற்றுத் தங்கம்
நானே பரிசாக என்றாய்

தேய்பிறையில்
தொய்ந்த நிலவுக்கு
இந்தப் பொய்யும்
அழகானது தான்

2 கருத்துகள்:

மதுரா. வேள்பாரி சொன்னது…

தங்கத்திற்கு எதுக்குத் தங்கம்
என்று நினைத்திருக்கலாம்

iNbAh சொன்னது…

திருநெல்வேலிக்கே அல்வாவா...
பரவாயில்ல...தங்கம் தகரமாகாதவரை சரி....