திங்கள், 29 ஜூன், 2009
இருள் தந்த வெளிச்சம்
வண்ணங்களைக்
கரைத்து
அடுக்கி வைத்தக்
கிண்ணங்களில்
ஊற்றி வைத்தேன்
மயிலிறகை
ஈர்க்குச்சியில் முடிந்து
வண்ணக் கலவையில்
முக்கியெடுத்து
வெற்றுப் பலகையில்
வரைய முனைந்தேன்
விரலை விட்டு
இறங்கிவர மறுத்து
துவண்டுப்போன தூரிகைக்குள்
ஓவியம்
நொண்டியடித்தது
அத்தனை வண்ணங்களையும்
அள்ளியெறிந்து
அண்ணாந்துப் பார்த்தேன்
செல்லரித்த சுவற்றினூடே
ஓர் உயிரோவியம்
மெல்ல நகர்ந்துச் செல்ல
அந்த இருளில்
விழிகள் மட்டும் வெளிச்சமாய்….
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக