மாதக்கணக்கில்
சுமக்காமல்
கணநேரத்தில் பெற்றுப்
போடுகிறேன்
ஒருசில தொட்டிலில்
மற்றவை அனாதைகளாய்
சிலவற்றைத்
தாலாட்டுகிறேன்
மற்றவற்றை
கருக்கலைப்பு செய்கிறேன்
நாட்கள்
சிலநேரமென்னை மலடியாக்குகிறது
பலநேரெமனக்குக் கிரீடம் சூட்டுகிறது
இவளுடனான மோகத்தில்
என் ராத்திரிகள் கரைகின்றன
இதயக்குழாயடியில்
புதுரத்தம் குடிக்க அந்த
நரம்புக் குடங்கள்
வரிசையில் காத்துக்கிடக்கையில்
உயிர்மரத்தை உலுக்கி
பெற்றுப்போட்ட களைப்பில்
மூச்சுவிடவும் மறந்து போகிறேன்
இன்பா
வெள்ளி, 12 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
கவிதை மிக அருமை... கவிதைக்குள் சிதறி கிடப்பது கவிதைத்தானே?
மிக்க நன்றி....
அது கவிதையே தான்....
கருத்துரையிடுக